by Staff /
10-07-2023
02:01:14pm
<br />
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த இந்த கொடூர சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிபிடி பேலாபூர் நவி மும்பையில் இருந்து கோரேகான் சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண் ஆட்டோவில் ஏறினார். குற்றம் சாட்டப்பட்ட நபர், ஆரே வனப்பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு அந்த பெண்ணை அடித்து பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவரை மிரட்டி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறினார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.
Tags :
Share via