முதல்வருடன் சந்திப்பு ஏன்? - திருமாவளவன் விளக்கம்

by Editor / 06-08-2025 02:36:08pm
 முதல்வருடன் சந்திப்பு ஏன்? - திருமாவளவன் விளக்கம்

தமிழ்நாட்டில் சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்து இருப்பது கவலைக்குரியது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அவரின் இல்லத்தில் நேரில் சந்தித்த விசிக தலைவர் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், "ஆணவக்கொலைகளை தடுக்க தமிழ்நாட்டில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என பேசினார்.

 

Tags :

Share via