நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று

by Editor / 08-02-2022 08:45:26am
நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று

 

கடந்த 2021  செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பட்டது.

இதனிடையே நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பினார். அது குறித்து விவாதிக்க கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் 8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை 10 மணிக்கு நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்ற தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 
 

 

Tags : A special meeting of the Tamil Nadu Legislative Assembly is being held today to re-enact the bill seeking NEET exemption

Share via