நைஜீரியா கிராமங்களில் பழங்குடியினரை குறிவைத்து தொடர் துப்பாக்கிச் சூடு 160 பேர் பலி.

by Editor / 26-12-2023 09:31:29am
நைஜீரியா கிராமங்களில் பழங்குடியினரை குறிவைத்து தொடர் துப்பாக்கிச் சூடு  160 பேர் பலி.

நைஜீரியாவில் பல கிராமங்களில் ஆயுதக் குழுக்கள் நடத்திய தொடர் துப்பாக்கிச் சூட்டில் 160 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான அறிவிப்பை உள்ளாட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 'பேண்டிட்ஸ்' எனப்படும் தீவிரவாதக் குழுக்கள் குறிப்பிட்ட பழங்குடியினரை குறிவைத்து கிராமங்களை தாக்கி சுட்டுக் கொன்றனர். இந்தப் படுகொலையில் இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : நைஜீரியா கிராமங்களில் பழங்குடியினரை குறிவைத்து தொடர் துப்பாக்கிச் சூடு 160 பேர் பலி.

Share via
Logo