உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையி நிர்வாணமாக ஓடிவந்த பெண் - உயிருடன் தீ வைத்த பயங்கரம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் பனைப்பாளையம் பகுதியில் இளம்பெண் ஒருவர் உடைகள் இல்லாமல் உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையில் காப்பாற்றுங்கள் என அலறி கொண்டே காட்டு பகுதியிலிருந்து ஓடி வந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண் தானாக தற்கொலை செய்ய முயற்சித்து தீ வைத்து கொண்டாரா அல்லது கொலை செய்யும் நோக்கில் வேறு யாரேனும் தீ வைத்தார்களா என விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்த இளம்பெண் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா (19) என தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் குடியிருந்து வரும் லோகேஷ் என்ற வாலிபரும் பூஜாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் நேற்று தனியாக காட்டு பகுதிக்கு சென்றதாகவும், அப்போது பூஜா லோகேஷிடம் உடனடியாக திருமண செய்ய சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் பூஜாவை கல்லால் அடித்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயத்துடன் மயக்கமடைந்த பூஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் லோகேஷை தேடி வந்த நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் மயக்கம் வருவதாக கூறி லோகேஷ் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்ந்துள்ளார். இதனிடையே ஆபத்தான நிலையில், தீக்காயங்களுடன் இளம்பெண் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உயிரோடு எரித்து கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :



















