கூட்டுறவு சங்கத் தலைவரிடம் செல்போன்-பணம் பறித்த கோவை வாலிபர் கைது

by Admin / 11-08-2021 03:01:08pm
கூட்டுறவு சங்கத் தலைவரிடம் செல்போன்-பணம் பறித்த கோவை வாலிபர் கைது

 

மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஊருக்கு வழி கேட்பது போல் பன்னீர்செல்வத்தின் கவனத்தை திசை திருப்பி பறித்து சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள குரல்குட்டை பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 63) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவராக இருந்து வருகிறார்.

சம்பவத்தன்று அவரது ஸ்கூட்டரில் உறவினரை பார்ப்பதற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து ஊருக்கு புறப்பட்டார். வரும் வழியில் பன்னீர் செல்வம் செல்போனுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஸ்கூட்டருக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஊருக்கு வழி கேட்பது போல் பன்னீர்செல்வத்தின் கவனத்தை திசை திருப்பி அவரிடமிருந்து செல்போனையும் பாக்கெட்டில் இருந்த ரூ.700 யும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து உடுமலை போலீஸ் நிலையத்தில் பன்னீர் செல்வம் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் போலீஸ் சூப்பிரண்டு சஷாங் சாய் உத்தரவின்பேரில் உடுமலை டி.எஸ்.பி. தேன்மொழி வேல் தலைமையில் உடுமலை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா ஆனந்தகிருஷ்ணன் மற்றும் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் செல்போன் மற்றும் பணம் பறித்து சென்றதாக கோவை உக்கடம்  ஜி.எம் நகரைச் சேர்ந்த நிஷார் என்ற தக்காளி நிஷாரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via