முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.

by Editor / 29-05-2023 09:31:00pm
முன்விரோதம் காரணமாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு காட்டன் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் கௌதம் (21) என்பவருக்கும் தூத்துக்குடி காந்திநகரைச் சேர்ந்த ஜெனோரிஸ் மகன் கார்லின் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக கார்லின் தனது நண்பர்களுடன் நேற்று மேற்படி கௌதம் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கௌதமின் தாயாரை கம்பி மற்றும் கட்டையால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த டிவி மற்றும் கடிகாரம் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்திச் சென்றுள்ளார்.

இதுகுறித்து கௌதமின் தாயார்  அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து எதிரி கார்லின் என்பவரை கைது செய்தார். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி கார்லின் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo