தாயை கொன்று சூட்கேஸில் உடலை அடைந்த மகன்
ஹரியாணா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஹிமான்ஷூ. இவர் தனது தாயான பிரதீமா தேவியிடம் (42), 5 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஹிமான்ஷூ தாயின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் பிரதீமா தேவி மூச்சுத்திணறி உயிரிழந்தார். பின்னர் சடலத்தை சூட்கேஸில் அடைந்து ஹிசாரிலிருந்து, உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் சடலத்தை வீச ரயிலில் எடுத்துச் சென்றுள்ளார். போலீசார் சந்தேகமடைந்து இவரை விசாரிக்கும்போது இந்த உண்மை தெரியவந்தது.
Tags :



















