ஐபோனில் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கை

by Staff / 16-12-2023 04:03:43pm
ஐபோனில் காத்திருக்கும் ஆபத்து.. எச்சரிக்கை

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி போன்களை தொடர்ந்து ஐபோன் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களிலும் ஆபத்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியக் கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (Indian Computer Emergency Response Team) வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் தொடர்ச்சியாக ஹேக்கர்களின் இலக்காக உள்ளன. இவ்வாறு தாக்குதல் நடத்தும் ஹேக்கர்கள் ஆப்பிள் போன்களின் தகவல்கள் மற்றும் பயனர்களின் தகவல்களை திருடுகின்றனர். எனவே ஆப்பிள் நிறுவனம் வழங்கும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி தங்கள் சாதனங்களையும், அதிலுள்ள தரவுகளையும் பாதுகாத்துக்கொள்ளுமாறு ஆப்பிள் பயனர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

Tags :

Share via