பிரதமர் மோடி தனி விமானம்  மூலம் டெல்லி புறப்பட்டார்.

by Editor / 06-04-2025 11:05:05pm
பிரதமர் மோடி தனி விமானம்  மூலம் டெல்லி புறப்பட்டார்.

இராமேஸ்வரம் புதிய பாம்பன் ரயில் தூக்கு பாலத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அவர்கள் டெல்லி செல்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வருகை.

ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை, பிரதமர் மோடிஅவர்கள் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்நவ் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர்  ராமேஸ்வர கோவிலில் தரிசனம் முடித்து விட்டு  தொடர்ந்து மத்திய அரசின் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் வருகை புரிந்தார்.

மதுரை வந்த பிரதமர் மோடியை  மரியாதை நிமித்தமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாணிக்கம்தாகூர் எம்பி, மேயர் இந்திராணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா காவல் துறை ஆணையாளர் லோகநாதன், மாவட்ட பாஜக தலைவர் மாரிசக்கவர்த்தி மற்றும் பாஜக நிர்வாகிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்றனர். இவர்களை சந்தித்த பிறகு பிரதமர் மோடி தனி விமானம்  மூலம் டெல்லி புறப்பட்டார்.
 

 

Tags : பிரதமர் மோடி தனி விமானம்  மூலம் டெல்லி புறப்பட்டார்.

Share via