அமலாக்கத்துறையினருடன் திமுகவினர் வாக்குவாதம்

சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள், விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்முடி வீட்டின் முன்பாக திமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர். இந்த நிலையில், வெளியில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் பொன்முடி வீட்டிற்குள் சோதனைக்காக சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் பைகளுடன் சென்றதால், அந்த பையை திறந்து காட்டுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Tags :