சாலையில் படுத்துறங்கிய யாசகர் கொலை- போலீசார் விசாரணை.
புதுச்சேரி செஞ்சி சாலை நடைபாதையில் வசித்து வந்தவர் முருகன் (70), யாசகரான இவர் வழக்கம் போல் நேற்று இரவு நடைபாதையில் படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில் காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் படுத்திருப்பதாக பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை செய்ததில் யாசகர மீது மர்ம நபர்கள் யாரோ கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பி ஒடியது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Tags : சாலையில் படுத்துறங்கிய யாசகர் கொலை.