பாராட்டு விழாவில் மயங்கி விழுந்த வினேஷ் போகத்.
ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியா திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 20 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்து தனது சொந்த ஊரான ஹரியானா மாநிலத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பாராட்டு விழா நடந்தது. களைப்பாக காணப்பட்ட அவர், மேடையிலேயே மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
Tags :