பத்திரிகையாளரை தாக்கிய காலிஸ்தானி ஆதரவாளர்

தனியார் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா, காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர் மீது காலிஸ்தானி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அம்ரித் பாலுக்கு ஆதரவாக இந்திய தூதரகத்தில் போராட்டம் நடத்திய போது, லலித் என்ற பத்திரிக்கையாளரை காலிஸ்தான் ஆதரவாளர்கள் லலித்தை தாக்கினர். இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதாகத் தெரிவித்திருந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :