பரோலில் வந்து பெண்ணை கரம்பிடித்த இளைஞர்

by Staff / 26-03-2023 03:37:06pm
பரோலில் வந்து பெண்ணை கரம்பிடித்த இளைஞர்

பீகார் மாநிலம் கோபால்கஞ்சை சேர்ந்த ராகுல் என்ற இளைஞர் இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இச்சம்பவத்திற்குப் பின், இளம்பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்தப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார் கோர்டில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்த இளைஞர் தான் அப்பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை என்றும், தாங்கள் காதலிப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பின்னர் அந்த இளைஞர் 4 மணிநேரம் பரோல் பெற்று அப்பெண்ணை திருமணம் செய்தபின் மீண்டும் சிறைக்குச் சென்றார்.

 

Tags :

Share via

More stories

Logo