திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.

நேற்று மதுரை பாண்டி கோயிலில் நடந்த முருகன் மாநாட்டில் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் ,முன்னாள் தலைவர், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல் முருகன், ஆந்திரா மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மத்திய இணை அமைச்சர் முரகன் உள்ளிட்டோ கலந்து கொண்டதோடு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்வி உதயகுமார், செல்லூர் ராஜ், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.உ. பி முதல்வர் யோகி ஆதித்யநாத் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை ..பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு தொடங்கப்பட்ட இம்மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
: 1) திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்ற வேண்டும்.
2) பகல் கம் தீவிரவாதிகளால் அநியாயமாக சுட்டுக் கொள்ளப்பட்ட அப்பாவி மக்களுக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடிக்கு பாராட்டு
3) திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு உரியது. அதைக் காக்க வேண்டும்.
4) தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருந்து இந்து அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.
5) இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபித்தல்.
r: 6) கந்த சஷ்டி திருநாளில் பக்தர்கள் அனைவரும் கந்த சஷ்டி ஒன்றாக கூடி பாட வேண்டும்.
என மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பெரும் திரளான முருக பக்தர்கள் கலந்து கொண்டதோடு எங்கும் அரோகரா கோஷம் ஒலித்தது.

Tags :