12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு தனது உச்ச வீட்டிற்கு இடம்பெயர்வது சிறப்புக்குரியது . கடக ராசிக்கு பகல் 11.00 மணிக்கு இடம்பெயர்கிறார்.

by Admin / 26-05-2026 10:52:31am
 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு தனது உச்ச வீட்டிற்கு இடம்பெயர்வது சிறப்புக்குரியது . கடக ராசிக்கு பகல் 11.00 மணிக்கு இடம்பெயர்கிறார்.

இன்று வாக்கிய பஞ்சாங்கத்தின்படி குரு பெயர்ச்சி. இந்தக் குரு பெயர்ச்சியின் போது குரு பகவான் மிதுன ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடக ராசிக்கு பகல் 11.00 மணிக்கு இடம்பெயர்கிறார். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே குரு தனது உச்ச வீட்டிற்கு இடம்பெயர்வது சிறப்புக்குரியது என்று ஜோதிட சாஸ்திரங்கள் சொல்கின்றன. குரு ஸ்தலம் என்று போற்றப்படும் ஆலங்குடி ஆபத் சகாயோஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் லட்சார்ச்சனை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. உச்ச வீடான கடகத்தில் அமரும் குரு தனது 5 7 9 ஆம் பார்வைகளால் முறையே விருச்சிகம் மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளை அருள் கூர்ந்து பார்க்கிறார். இந்தப் பயிற்சியில் குரு பகவான் உச்சம் பெறுவதன் பொருட்டு அனைத்து ராசிகளுக்கும் நற்பனங்கள் அதிகம் கிடைக்கும் என்பதால் சில ராசிகள் பரிகார மூலம் முகங்களை பெறலாம் என்றும் சொல்லப்படுகின்றது. பொதுவாக, மேஷம், ரிஷபம் கடகம் விருச்சிகம் மீனம் ஆகிய ராசிகளுக்கு அதிக நல்ல பலன்களும் மிதுனம் சிம்மம் கன்னி துலாம் தனுசு மகரம், கும்பம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்வது மூலம் நிறைய வளங்களை பெறலாம் என்று சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். பரிகாரம் செய்யக்கூடிய ராசியினர் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி அல்லது குரு பகவானுக்கு மஞ்சள் மலர்களும் கொண்ட கடலை கொண்டும் வழிபாடு செய்யலாம். ஏழை எளியவர்களுக்கு மஞ்சள் நிற ஆடைகள் வழங்கலாம். படிக்கின்ற மாணவர்களுக்கு புத்தகம் எழுதுபொருள், படிப்பு கட்டணம் கட்டுதல் இன்னவற்றை வாங்கித் தருவதும் கொடுப்பதும் பலன் தரலாம்.

திருக்கணிதபடி ஜீன்2 -ந்தேதி குரு பெயர்ச்சி.

 

Tags :

Share via

More stories

Logo