மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

by Admin / 29-04-2026 11:52:08pm
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை மீனாட்சியமும் பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில்  வலம் வந்தன ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீனாட்சி சொக்கநாதர் முழக்கம்பட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்தில் தொடங்கிய இந்த விழாவில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை முக்கியமான நிகழ்வுகளாக நடைபெற்றன .. சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. மே ஒன்றாம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலகலமாக நடைபெற உள்ளது தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் எழுந்தருளி தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் மற்றும் ஆழ்வார்புரம் பகுதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்து சாகும் தீர்க்கும் நிகழ்வு நடைபெறும். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை காண தாமதமாக வரும் கள்ளழகர் கோபத்துடன் வைகை ஆற்றில் இறங்கி மண்டூக முனிவருக்கு சாவ விமோசனம் அளிப்பதாக ஐதீகம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு முந்தைய நாள் மதுரை எல்லையில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடைபெறும் மே 1 அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கம் என்று அவரை வரவேற்பார்கள். விழாவை ஒட்டி வைகை ஆலையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் மேலும் ஆற்றில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவு செய்பவர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 

Tags :

Share via
Logo