திருமாவளவன் வெறுப்புணர்வை தூண்டும் நோக்கில் பேசவில்லை.-வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

by Admin / 29-04-2026 11:59:29pm
திருமாவளவன் வெறுப்புணர்வை தூண்டும் நோக்கில் பேசவில்லை.-வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

விடுதலைக் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இந்து மத நூலான மனுஸ்மிருதி குறித்து பேசியதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடர்பாட்டது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு இணைய வழி கருத்தரங்கில் மனுஷமிருதி நூல் பெண்களை இவ்வாறு சித்தரிக்கிறது என்று குறித்து திருமாவளவன் பேசினார். அவர் இந்து பெண்களை இழிவுபடுத்தியதாக கூறி மதுரையைச் சேர்ந்த வேதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்த நீதிபதி வேல்முருகன் திருமாவளவன் சொந்த கருத்துக்களை கூற வில்லை என்றும் மனுஸ்மிருதிபகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளை மேற்கோள் காட்டியுள்ளார் என்றும் தெரிவித்தார் .திருமாவளவன் வெறுப்புணர்வை தூண்டும் நோக்கில் பேசவில்லை என்றும் அவரது பேச்சு பொதுவான விவாதமாக இருந்ததாகவும் கூறி வழக்கை ரத்து செய்தார்.

 

Tags :

Share via
Logo