விஜயகாந்த் பெயரில் தெரு

by Staff / 29-01-2024 04:39:40pm
விஜயகாந்த் பெயரில் தெரு

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மறைவை ஒட்டி அவரது பெயரை சாலைக்குச் சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த சூழ்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே மேல்மனம்பேடு கிராமம், கீழ் மனம்பேடு பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு அந்த கிராமத்தினர், கேப்டன் விஜயகாந்த் தெரு எனப்பெயர் வைத்துள்ளனர். மேலும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.

 

Tags :

Share via