திமுக சார்பில் வரும் 7ஆம் தேதி அமைதி பேரணி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-வது நினைவுநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முன்னணியினர் கலந்து கொள்ளும் "அமைதிப் பேரணி" வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகில் இருந்து புறப்பட்டு காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர், கட்சி நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். இது தொடர்பாக தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Tags : DMK will hold a peace rally on the 7th