கூட்டநெரிசலில் சிக்கி 44 பேர் பலி

by Editor / 30-04-2021 11:24:53am
கூட்டநெரிசலில் சிக்கி 44 பேர் பலி

வடக்கு இஸ்ரேலில் உள்ள மெரோனில் புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலத்தில் கூடிய மக்கள் கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலியானார்கள். வடக்கு இஸ்ரேலில் புகழ்பெற்ற கல்லறை ஸ்தலத்தில் விடுமுறையை கொண்டாட ஏராளமான இஸ்ரேல் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவ்வாறு கூடியதில் இன்று(ஏப்.,30) கூட்டத்தில் சிக்கி 44 பேர் பலியாகினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு இந்த ஸ்தலம் மூடப்பட்டிருந்தது.மீண்டும் திறப்புஇந்த ஆண்டு தடுப்பூசியால் கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதால் மீண்டும் யாத்திரை ஸ்தலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் மக்கள் கூட்டம் கூடியதால் கூட்டநெரிசலில் சிக்கி 44 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

 

Tags :

Share via
Logo