திருமாவளவன் பிறந்தநாள் - உதயநிதி வாழ்த்து

by Staff / 17-08-2023 11:42:59am
திருமாவளவன் பிறந்தநாள் - உதயநிதி வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “சாதிய - மதவாத - சனாதன சக்திகளுக்கு எதிராக மக்கள் மன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் சமரசமற்ற போர்க்குரலை எழுப்பி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பாசிஸ்ட்டுகளை வீழ்த்தி #INDIA-வை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் - செயல்பாடுகளும் வெல்லட்டும்!”

 

Tags :

Share via