ஜம்மு - காஷ்மீரில் ரஜோரியில் நிலநடுக்கம்

by Staff / 17-08-2023 11:39:01am
ஜம்மு - காஷ்மீரில் ரஜோரியில் நிலநடுக்கம்

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது 3.6 ஆக பதிவாகியுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட் சேதமோ ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி தோடா மாவட்டத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் வீடுகள் உள்பட பல்வேறு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via