திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்

by Staff / 17-08-2023 11:44:31am
திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்த முக ஸ்டாலின்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். மேலும், திருமாவளவன் பிறந்த நாளுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via