பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

by Editor / 17-08-2024 11:56:19pm
பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஆகஸ்ட்.17) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல். தொடர்ந்து, பாடகி சுசீலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகி சுசீலா, அரை நுாற்றாண்டுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவின் இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

 

Tags : பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

Share via