“கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பு” - மத்திய அரசு

by Staff / 17-08-2024 05:32:38pm
“கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பு” - மத்திய அரசு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. டன் ஒன்றுக்கு ரூ.4600ல் இருந்து ரூ.2100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜூலை 31ம் தேதிக்கு முன் ரூ.7000 வரை வரி விதிக்கப்பட்டது. நாட்டின் தேவையை விட அதிக விலைக்கு கச்சா எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என கூறப்படுகிறது. வரி விகிதம் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.
 

 

Tags :

Share via