200 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை  காவல்துறையினர் கைப்பற்றினார். 

by Editor / 28-05-2023 11:15:59pm
 200 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை  காவல்துறையினர் கைப்பற்றினார். 

நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஹர்ஷ் சிங்  உத்தரவின் பேரில் தனிப்படை போலிசாரால்  தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு பல்வேறு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.மேற்படி தனிப்படை போலீசாருக்கு  கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேற்று வேட்டைக்காரனி ருப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 200 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை  காவல்துறையினர் கைப்பற்றினார். மேலும் இக் குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்ட குழந்தை வேலு,கண்டியன் காடு, வேட்டைக்காரன் இருப்பு. என்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இக் குற்றச்சம்பவம்  குறித்து நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.இதுபோன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,என்றும் குற்றவாளிகள்  அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via

More stories

Logo