திருப்பதியில் காலணிகளை பாதுகாக்க ஸ்கேனிங் முறை அறிமுகம்

திருப்பதி கோவிலில் பக்தர்களின் காலணிகளை பாதுகாக்க திருப்பதி தேவஸ்தானம் ரேடியோ அதிர்வெண் ஸ்கேனிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. ஏ.டி.சி அருகே உள்ள லக்கேஜ் மையத்தில் சோதனை அடிப்படையில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பக்தர்கள் தங்களது காலணிகளை லக்கேஜ் மையத்தில் உள்ளவர்களிடம் கொடுத்தால் பக்தர்களின் போட்டோ மற்றும் செல்போன் எண்ணுடன் ஸ்கேனிங் வசதியுடன் கூடிய ரசீது வழங்குகின்றனர். இந்த சோதனை அடிப்படையிலான முறைக்கு 98% பக்தர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
Tags :