உயிருக்கு போராடுகிறார் பிரபல பெண் பாடலாசிரியர்.

by Editor / 19-05-2021 10:11:06am
உயிருக்கு போராடுகிறார் பிரபல பெண் பாடலாசிரியர்.

திரைப்பட பாடலாசிரியரும், வசனகர்த்தாவும், இயக்குநர் பாரதிராஜாவின் துணை இயக்குநருமான தேன்மொழிதாஸ், கொரோனா தொற்றினால் சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கவலைக்கிடமான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்.

மேற்கு தொடர்ச்சி மலையில் மணலாறில் 1976ல் பிறந்தவர் தேன்மொழிதாஸ். சுதா என்ற இயற்பெயரை தேன்மொழிதாஸ் என்று மாற்றிக்கொண்டார். 2001ல் இசையில்லாத இலையில்லை என்ற இவரின் முதல் கவிதை தொகுதிப்பு வெளிவந்தது. தொடர்ந்து அநாதி காலம், ஒளியறியாக்க்காட்டுக்குள், நிராசைகளின் ஆதித்தாய், காயா உள்ளிட்ட கவிதை தொகுதிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஈரநிலம் படத்தின் மூலமாக பாரதிராஜாவின் உதவியாளராக சேர்ந்து, அப்படத்தில் பாடல் எழுதி, படத்தின் வசனமும் எழுதினார். 2003ம் ஆண்டில் ஈரநிலம் படத்தின் மூலம் சிறந்த உரையாடைல் ஆசிரியர் விருதினையும் தமிழ்நாடு அரசு வழங்கி கவுரவித்தது.

அவர் உயிருக்கு போராடுவதாக இயக்குநர் மு.களஞ்சியம் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர், ''இயக்குனர் பாரதிராஜாவின் உதவியாளரும், ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களிடம் 50 க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியவருமான கவிஞர் தேன்மொழி தாஸ் கடும் கொரோனா பாதிப்பால் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்ட்டியுட் மருத்துவமனையில் கடந்த ஐந்து நாட்களாக உயிருக்கு போராடுகிறார். தமிழக அரசு உதவி செய்ய வேண்டுகிறேன்''என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags :

Share via