எகிப்து எல்லை ரஃபா கடவையை இன்று முதல் இஸ்ரேல் மீண்டும் திறக்கிறது.

by Admin / 02-02-2026 09:46:17am
 எகிப்து எல்லை ரஃபா கடவையை இன்று முதல் இஸ்ரேல் மீண்டும் திறக்கிறது.

 எகிப்து எல்லை ரஃபா கடவையை இன்று முதல் இஸ்ரேல்  இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கிறது. இந்த முதற்கட்டத் திறப்பின் போது, தினமும் 50 நோயாளிகள் மட்டுமே மருத்துவச் சிகிச்சைகளுக்காக வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுடன் தலா இரண்டு உறவினர்கள் செல்லலாம். மேலும்,  போரின் போது வெளியேறியவர்களில் சுமார் 50 பேர் தினமும்  காசாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். பயணிகள்  அனைவரும்  நடந்தே  கடக்க வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்  மற்றும்  எகிப்தின் உள்ளே நுழையவும் வெளியேறவும் பாதுகாப்புச் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியஎல்லைக் கண்காணிப்பு முகவர்கள் இந்தச் செயல்பாட்டை மேற்பார்வையிடுவார்கள்.இஸ்ரேலிய இராணுவம்  காசாவில் நடந்த போரில் சுமார் 70,000 பேர் உயிரிழந்ததை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு முன்பு ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.காசா சுகாதார அமைச்சகத்தின் தற்போதைய தகவல்படி, உயிரிழப்புகள் 71,000-ஐத் தாண்டியுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 எகிப்து எல்லை ரஃபா கடவையை இன்று முதல் இஸ்ரேல் மீண்டும் திறக்கிறது.
 

Tags :

Share via