19 புறநகர் மின்சார ரயில்கள் இன்று (மே 15) ரத்து

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே 19 புறநகர் மின்சார ரயில்கள் இன்று (மே 15) ரத்து செய்யப்பட்டுள்ளது. கவரப்பேட்டை யார்டு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, 19 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags : 19 புறநகர் மின்சார ரயில்கள் இன்று (மே 15) ரத்து