ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதியில் கொரானா தொற்று அபாயம் எஸ்.கே.மிட்டல்

by Editor / 15-01-2022 01:08:44pm
 ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதியில் கொரானா தொற்று அபாயம் எஸ்.கே.மிட்டல்

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசு கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது., பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஜல்லிக்கட்டு மேற்பார்வையாளர் எஸ்.கே மிட்டல்  பாலமேடு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார் அவருடன் மதுரை சரக டி.ஐ.ஜி.பொன்னி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்த ஜல்லிக்கட்டு மேற்பார்வையாளர் எஸ்.கே மிட்டல் கூறும்போது:
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் மேற்பார்வையாளர் என்ற முறையில் வருகை புரிந்ததாகவும்., மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நல்லமுறையில் நடைபெறுகிறது என்றார்.
தொடர்ந்து, ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பதாகவும், தற்போது பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இது வரை 6பேர் காயம் அடைந்தனர்.ஜல்லிக்கட்டு போட்டி என்றால் காயம் ஏற்படுவது சகஜம் தான்., யாருக்கும் பெரிய அளவில் காயம் இல்லை என தெரிவித்தார். காளைகளை சேகரிக்கும் இடத்தில் அதிகளவில் இளைஞர்கள், பொதுமக்கள், முகக்கவசம் இன்றி அதிகளவில் கூடியுள்ளதால் கொரானா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


 

 

Tags :

Share via