பீஸ்ட் திரைப்படம் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்

by Editor / 13-04-2022 08:42:53am
பீஸ்ட் திரைப்படம் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்ட  விஜய் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இன்று வெளியாகும் `பீஸ்ட்' திரைப்படத்திற்கு அவரது ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேற்று இரவு முதலே திரையரங்குகள் திருவிழாக் கோலமாகக் காட்சியளித்தது. படத்தினை வரவேற்கும் விதமாக நடிகர் விஜய் ரசிகர்கள் பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் SBT சினிமாஸ், லெட்சுமி மற்றும் சண்முகா திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் 3 திரையரங்குகளில் உள்ள 5 ஸ்கீரினில் ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து SBT சினிமாஸ் திரையரங்கில் பீஸ்ட் திரைப்படத்தை வரவேற்கு விதமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ரசிகர்கள் நடிகர் விஜய் திரைப்பட பாடல்களுக்கு இடைவிடாது தொடர்ந்து நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories