சபரிமலையில் இன்று  மாலை 5.00 மணிக்கு நடை திறப்பு.

by Admin / 14-06-2024 10:24:43am
 சபரிமலையில் இன்று  மாலை 5.00 மணிக்கு நடை திறப்பு.

ஆனி மாத பூஜை சபரிமலையில் இன்று  மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும்.நடைதிறப்பையொட்டி இன்று தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெறும்.ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் நாளை 15-ந்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருகிற 19-ந்தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிசேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளன.19-ந்தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

 சபரிமலையில் இன்று  மாலை 5.00 மணிக்கு நடை திறப்பு.
 

Tags :

Share via