திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து குற்றவாளி தப்பி ஓட்டம்.

by Editor / 14-06-2024 10:20:28am
திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து குற்றவாளி தப்பி ஓட்டம்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கதிர்வேல் மகன் கோபால் வயது 29 இவர் ஒரு பகுதியைச் சேர்ந்த சிறுமியை கொலை முயற்சி செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கடந்த 2021 ஆம் ஆண்டுஅருப்புக்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து பின்னர் இவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுசிவகங்கை மாவட்டத்தில் உள்ள புரசடை உடைப்பு திறந்தவெளி  சிறைச்சாலையில் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார் இரண்டு ஆண்டுகள் முடிவற்ற நிலையில்  திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் மேலும் சம்பவம் குறித்து தலைமை சிறைகாப்பாளர்  முத்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் அடிப்படையில் காளையார் கோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் செழியன் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கைதி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

 

Tags : திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து குற்றவாளி தப்பி ஓட்டம்

Share via

More stories

Logo