தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏப்ரல் 27ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தவிர தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் சுமார் 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு . அதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும். அதே சமயம் உள் மாவட்டங்களில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என்றும் வளிமண்டல கீழடக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.
Tags :


















