"மிகப் பெருமையாக உணர்கிறேன்" - சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி மையத்தில் 7 ஆய்வுகள் செய்வதற்காக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளி சென்றுள்ளார். இந்நிலையில், டிராகன் விண்கலத்திலிருந்து சுபான்ஷு சுக்லா பேசுகையில், “இந்த தருணத்தை மிகப் பெருமையாக உணர்கிறேன். மிகச் சிறிய அடிகள் மூலம் மிகப் பெரிய இலக்கை அடையப் போகிறோம். ஒவ்வொரு இந்தியரும் என் இதயத்தில் இருக்கிறீர்கள். விண்வெளியில் குழந்தைபோல உணர்கிறேன். சர்வதேச விண்வெளி மையத்தில் நேரத்தைச் செலவிட ஆவலாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Tags :