லாரி ஏற்றிக் கொலை.. திமுகவுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி

by Editor / 26-06-2025 01:11:56pm
லாரி ஏற்றிக் கொலை.. திமுகவுக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி

தூத்துக்குடி ஒட்டப்பிடாரத்தில் அதிமுக நிர்வாகி முத்துபாலகிருஷ்ணனை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இதையும் தனிப்பட்ட கொலை என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் திமுக அரசு கடந்து செல்ல முனையுமா? திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories