3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு

by Staff / 16-09-2023 01:27:54pm
3 மாதங்களில் 179 குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிராவில் உள்ள நந்தூர்பார் மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் 179 குழந்தைகள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறைந்த எடை, மூச்சுத்திணறல், செப்சிஸ், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் ஜூலையில் 75, ஆகஸ்டில் 86, செப்டம்பரில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அங்கு பெண்களுக்கு ரத்த சோகை தொடர்பான நோய்கள் இருப்பதால் பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து நந்துர்பார் மருத்துவமனை 'மிஷன் லக்ஷ்யா 84 நாட்கள்' என்ற முக்கியமான முயற்சியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் குழந்தை இறப்புக்கான மூல காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.என மருத்துவர்கள் தெரிவித்துஉள்ளனர்.

 

Tags :

Share via

More stories