தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல்

2025-26 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், திமுக அரசின் முழுமையான பட்ஜெட் இதுவாகும். எனவே புதிய அறிவிப்புகள், சலுகைகள் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், அது உயர்த்தப்படுமா, பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகையை ரூ.2000 ஆக உயர்த்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இதுவாகும். திமுக அரசு இதுவரை நான்கு நிதிநிலை அறிக்கைகளை தக்கல் செய்துள்ளது. அவற்றில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது ஆனால் எல்லாம் அறிவிப்புகளாகவே உள்ளது.
Tags :