கவுன்சிலர் மறைவு - முதல்வர் இரங்கல்
சென்னையில் கருணாநிதி நினைவு நாளையொட்டி திமுக சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் மாமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஆலப்பாக்கம் கு.சண்முகம் மரணம் அடைந்தார். இந்நிலையில், இவரது மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “பெருநகரச் சென்னை மாகராட்சியின் 146ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. ஆலப்பாக்கம் கு. சண்முகம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் துயரும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
Tags :