கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை.
விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி பிளவக்கல் அணையில், பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுச் சுவர், நுழைவு வாயில், நடைபாதை, குழந்தைகள் விளையாடும் இடம், திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம், செல்ஃபி பாயிண்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags : கூமாப்பட்டி பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை.



















