ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு.. போலீஸ் குவிப்பு

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மனைவி பவித்ரா (25), கடந்த 2015ஆம் ஆண்டு காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அகமது (26) என்பவர் பிடித்து விசாரணை நடத்தினர். வீடு திரும்பிய அவர் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதில் இறந்ததாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். இது பெரும் கலவரமாக மாறியது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஆக.28) வழங்கப்படவுள்ளது. இதனால், மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Tags : ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு.. போலீஸ் குவிப்பு