தவெக நிர்வாகியின் கார் மோதி புதுமாப்பிள்ளை தாய்..தந்தையோடு பலி.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தவெக நிர்வாகி ஓட்டிச் சென்ற கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட தவெக பொருளாளர் சுந்தரமூர்த்தி இயக்கி சென்ற கார், எதிரே சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில், ஆறுமுகம், அவரது மனைவி செல்லியம்மாள், மகன் நாராயணன் ஆகியோர் உயிரிழந்தனர். நாராயணனுக்கு செப்.4ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : தவெக நிர்வாகியின் கார் மோதி புதுமாப்பிள்ளை தாய்..தந்தையோடு பலி.