சூர்யா 42 படத்தின் பெயா் கங்குவா.....

by Admin / 16-04-2023 09:43:09am
 சூர்யா 42 படத்தின் பெயா் கங்குவா.....

சிறுத்தை   சிவாவின்   இயக்கத்தில்  நடிகர்  சூர்யா  ஐந்து  விதமான  வேடங்களில் நடித்து  தயாராகிக் கொண்டிருக்கின்ற படத்திற்குகங்குவா என்று  பெயரிடப்பட்டுள்ளது.  சூர்யா 42 ]படத்தின் பாடல்  வெளியீட்டு உரிமையை  சரிகம  ஆடியோ வெளியீட்டு நிறுவனம் கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாக தகவல் . இது குறித்து  அவர்களுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் என பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுவதாகவும் சூர்யாவின்படத்தில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு பெரும் தொகை கொண்டு  இந்த படம் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன  இந்த படத்தினுடைய நாயகன் சூர்யா நாயகியாக திசா பதானி நடிக்கின்றார். தேவி பிரசாத்  இசையமைப்பில் இப்படம்  வெளிவர இருக்கின்றது சூர்யாவினுடைய ரசிகர்களுக்கு இந்த படம் மிகுந்த சந்தோஷத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம் ஒரு சரித்திர கால கதை அம்சத்தோடு கூடியதாக [1678கால கதைக்களம்].இப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது சூரரைப் போற்று என்கிற படத்தில் நம்பிக்கையை உருவாக்கிய சூர்யா ஜெய் பீம்படத்தில் சமூக நீதிக்காக போராடக்கூடிய வழக்கறிஞராக வந்து மக்கள் மனதில் கொள்ளை கொண்ட இவர் அடுத்த அடுத்த படங்களில் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்த நடிப்பதன் மூலமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றார்

 சூர்யா 42 படத்தின் பெயா் கங்குவா.....
 

Tags :

Share via