சந்திரயான் 3 வெற்றி - டிடிவி தினகரன் வாழ்த்து

by Staff / 14-07-2023 04:23:06pm
சந்திரயான் 3 வெற்றி - டிடிவி தினகரன் வாழ்த்து

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி நிலையத்திலிருந்து ‘ஜிஎஸ்எல்வி மார்க் 3’ ராக்கெட் மூலம் இன்று (ஜூலை 14) மதியம் 2.35 மணிக்கு ‘சந்திரயான்-3’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருவது மேலும் மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via