பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து 20 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் போர்ட் போர்டால் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகர் கம்பாலாக்கு 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. போர்ட் போர்டால்போல் நகருக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தறிகெட்டு ஓடியது தொடர்ந்து சாலையோரத்தில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் பாய்ந்து பஸ் பலமுறை உருண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags :



















