ஓபிஎஸ்-க்கு மரண அடி.. ஜெயக்குமார்

by Staff / 19-01-2024 04:02:22pm
ஓபிஎஸ்-க்கு மரண அடி.. ஜெயக்குமார்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு இடைக்காலதடை விதிக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தர்ம யுத்தம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிவந்த ஓபிஎஸ் இனி எந்த காலத்திலும் அதிமுககாரன் என்று சொல்ல முடியாத அளவிற்கு உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பின் மூலம் மரண அடி கொடுத்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது எனவும் ஓபிஎஸ், அதிமுக மற்றும் பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories