மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கழுகுகள் கணக்கு எடுக்கும் பணி  தொடக்கம்.

by Editor / 30-12-2023 07:50:20pm
 மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கழுகுகள் கணக்கு எடுக்கும் பணி  தொடக்கம்.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் பல்லுயிர் காடுகள் ஆகும். இங்கு அரிய வகை மூலிகைகளும், நூற்றாண்டு கடந்த பழமையான மரங்களும், புலி, யானை,காட்டு மாடு, சிறுத்தை, மான், கரடி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே வசிக்கும் ராஜநாகம், பல்வேறு வகையான பறவை இனங்களும், போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இங்கு ஆண்டுதோறும் புலிகள் கணக்கெடுப்பு, யானைகள் கணக்கெடுப்பு, பறவைகள் கணக்கெடுப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த கணக்கெடுப்பின்போது கழுகுகளும் சேர்த்து கணக்கு எடுக்கபப்டுவது வழக்கமாக இருந்துவருகிறது.

கழுகுகள் அழிந்து வரும் நிலையில் உள்ளதால் அதன் பாதுகாப்பு அவசியத்தை உணர்த்தவும், அதன் வாழ்விடத்தை மேலாண்மை செய்வதற்கும் இந்த ஆண்டு முதன்முறையாக இன்றும் நாளையும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வண்ணச்சரகத்தில கருப்பாநதி அணை பகுதி, வடகரை, மேக்கரை, அடவி நயினார் கோவில் அணை பகுதி,கடையநல்லூர், சொக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் கடையநல்லூர் வணச்சரக அலுவலர் சுரேஷ் தலைமையில் இன்று கழுகுகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதில் ஏராளமான வனத்துறையினர் கலந்து கொண்டு கழுகுகள் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

Tags :  மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கழுகுகள் கணக்கு எடுக்கும் பணி  தொடக்கம்.

Share via